ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் குறித்தும் கமலின் நடிப்பு குறித்தும் பேசினர்.
இந்நிலையில் இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், “‘விக்ரம்’ ஷூட்டிங்கின் மூன்றாவது நாள் டயலாக் பேப்பர் பார்த்துட்டு நான் எழுதுற தமிழ்ல பிழை இருக்குனு சொன்னாரு. அவர் யார் எழுதுறதுனு கேட்டாரு.
அப்போ நான்தான் எழுத்துனேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு நான் நல்லா தமிழ் எழுத தெரிஞ்ச ஆளை வச்சு எழுத ஆரம்பிச்சிட்டேன். நான் அனிருத்தை மீட் பண்ணும்போதெல்லாம் ‘இந்தியன் 2’ படத்தோட அப்டேட்தான் கேட்பேன்.
‘விக்ரம்’ படத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்து போடுறதுக்கு ‘இந்தியன் 2’ படத்தோட படப்பிடிப்பு தளத்துக்குப் போனேன். அப்போ அவர் கையில மேக்கப் போட்டுருந்ததுனால அவரால கையெழுத்து போடா முடியல. அப்போ கையில இருக்கிற மேக்கப்பை நீக்கிறதுக்கே 5 நிமிஷம்கிட்ட ஆகுச்சு. அந்த மேக்கப்போட அவர் ஒவ்வொரு நாளும் இருந்திருக்காரு.” என்றார் லோகேஷ் கனகராஜ்