Indian 2 : “எல்லாரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவாங்க…" – சிம்பு ஓப்பன் டாக்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’.

1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் சமகாலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ராஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஜூன் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு சிம்பு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இயக்குநர் ஷங்கர் குறித்தும் கமல் குறித்தும் பேசியிருக்கும் நடிகர் சிம்பு, “லேட்டாக வர்றேன்னு எதுவும் நினைச்சுக்காத்தீங்க. மணி சாரோட ‘தக் லைஃப்’ படத்தோட ஷூட்டிங்ல இருந்து வர்றேன். இந்தியன் படம்தான் எனக்கு பேவரைட்னு நான் கமல் சார்கிட்ட சொல்லியிருக்கேன். பல முறை இந்தப் படத்தை பார்த்துருக்கேன். கமர்சியல் படத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் படத்துல வச்சிருக்காங்க. இப்போ கமல் சார் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதை பத்தி ‘தக் லைஃப்’ மேடையில பேசுறேன். மக்களுக்கு பிடிச்ச விஷயங்களை பண்ணனும்னு கமல் சாரோட தேடல் ஆச்சரியமாக இருக்கு. நம்ம எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான படங்களைதான் ஷங்கர் கொடுப்பாரு. பெரிய படங்கள் பண்றது சுலபமான விஷயம் அல்ல. ஷங்கர் சார் தொடர்ந்து பெரிய படங்கள் பண்ணிகிட்டு இருக்காரு.

கமல், சுபாஸ்கரன்

ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட மியூசிக் இப்போ வரைக்கும் மறக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டு போயிட்டாரு. இந்தப் படத்துக்கு மியூசிக் பண்றதுக்கு யாரைக் கேட்டாலும் பண்ணிருக்கமாட்டாங்க. ஆனா, அனிருத் தைரியமாக பண்ணியிருக்கார். இப்போ எல்லோரும் பேன் இந்தியானு பேசுறாங்க. ஆனா, அந்த இந்தியன்ங்கிற டைட்டிலுக்கு உரித்தானவர் கமல் சார்தான். இந்தியன் என்றால் ஒற்றுமைதான். ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதைதான் இந்த படமும் உணர்த்தும்னு நினைக்கிறேன். ‘விஸ்வரூபம்’ படத்தோட சமயத்துல ஏதோ பிரச்சனைனு கேள்விபட்டதும் உடனடியாக குளிக்காமகூட அவர்கிட்ட போனேன். நான் உடல் எடையை குறைச்சேன்னு பலர் பேசுறாங்க. ஆனா, அது ஆன்மிகம் சார்ந்த விஷயம். எல்லோரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவாங்க. நம்மளோட முடிகூட நம்மைவிட்டு போயிடும். நம்ம கிட்டயே இருக்கிறது நம்ம உடம்புதான். அதை பத்திரமா பாத்துக்கோங்க. நான் அதை தாமதமாகதான் புரிஞ்சுக்கிட்டேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.