Indian 2: "விவேக் நம்மகூட இல்ல; ஆனா இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு…" – ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’.

1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். ஒருபுறம் ராம் சரணுடன் `Game Changer’ தயாராகிக் கொண்டிருக்க, ஷங்கரின் ‘இந்தியன்-2’ வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஷங்கர்

இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ‘இந்தியன் -2’ படம் பற்றி பேசிய இயக்குநர் ஷங்கர், “இன்னைக்கு காலையில தூக்க கலக்கமாக எழுந்தேன். அனிருத் ஃபைனல் மிக்ஸ் ஆடியோ அனுப்பியிருந்தாரு. அதைப் பார்த்ததும் சுறுசுறுப்பா ஆகிடுச்சு. எனக்கு 100 சதவீதம் திருப்தி வர்ற வரைக்கும் வேலை பார்ப்பாரு. ரொம்ப நாட்களாக அனிருத் ‘தாத்தா வர்றாரு’ பாடலுக்கு செலவழிச்சார். இந்த தலைமுறைக்கு இந்தியன் தாத்தாவை கொண்டு போகிற மாதிரி அறிவு ‘கம் பேக் இந்தியன்’ பாடலை பா.விஜய் எழுதியிருக்காரு. இந்தியன் 1 முடிச்சதும் கமல் சார் இந்தியன் 2 பண்ணலாம்னு சொன்னாரு. அப்போ என்கிட்ட கதை இல்ல. 2.0 முடியுற அப்போதான் இந்தியன் 2க்கான கதை கிடைச்சது.

‘அந்நியன்’ படப்பிடிப்பபின்போது

முதல் முறையாக இந்தியன் தாத்தாவாக மேக்கப் போட்டுட்டு வந்தப்போ எல்லோரும் சிலிர்த்துப் போய் பார்த்தோம். 25 வருஷம் கழிச்சு இந்த படத்தோட போட்டோ ஷூட்க்கு அதே மாதிரி மேக்கப் போட்டுட்டு வரும்போது அதே மாதிரி சிலிர்த்துப் போய் பார்த்தோம். 360 டிகிரி நடிகர்னு கமல் சார் பத்தி ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். இன்னைக்கும் 361 டிகிரில அப்டேடட் நடிப்பைக் கொடுக்கிறாரு. கிட்டதட்ட 70 நாட்களுக்கு மேல இந்தியன் தாத்தா மேக்கப் போட்டுருக்காரு. விவேக் இப்போ நம்மக்கூட இல்ல. ஆனா இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு அவர் நம்மகூடவேதான் இருப்பாரு. எஸ்.ஜே சூர்யா ஒவ்வொரு அசைவுக்கும் அதிகளவுல மெனக்கெடல் போடுவாரு.

சித்தார்த்தோட வளர்ச்சியை ரொம்பவே ஆச்சரியம பார்க்கிறேன். நேத்துகூட விகடன்ல சிறந்த நடிகர் விருது கொடுத்திருக்காங்க. காஜல் அகர்வால் ரெண்டாவது பாகத்துல இல்ல. மூணாவது பாகத்துலதான் வருவாங்க. முதல்ல இந்தியன் 2 வேற தயாரிப்பாளர் தயாரிக்க வேண்டியதாக இருந்துச்சு. அப்போ சுபாஷ்கரன் எனக்கு கால் பண்ணி இந்தியன் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தயாரிக்கிறேன்னு சொன்னாரு.

கமல்

இந்த படத்தை ஸ்க்ரீனிங் பண்ணும் போது என்னுடைய அசிஸ்டன்ட்ஸ் வசனம் பத்தி நல்லவிதத்துல சொன்னாங்க. அதுக்குக் காரணம் ஜெயமோகன்தான். கபிலன் வைரமுதுவும் வசனம் எழுதியிருக்காரு. எளிய மக்களை பிரதிபலிக்கிற மாதிரி லக்ஷ்மி சரவணகுமார் வசனம் எழுதியிருக்காரு. இந்தப் படத்துல ஒரு பாடலுக்காக பொலீவியா போனோம். அங்க கண்ணு கூசுற அளவுக்கு வெளிச்சம் இருக்கும். பயங்கரமா குளிரும். இந்தப் படத்தோட அறிமுக சண்டைக் காட்சியை அனல் அரசு பண்ணியிருக்காரு. இந்த படத்துல செகண்ட் யூனிட் டைரக்ரா வேலை பார்த்திருக்கிற வசந்த பாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகியோருக்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.