Tamil News Live Today: `எப்போது வெளிவருவேன் என்று தெரியவில்லை' – திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்!

உச்ச நீதிமன்றம் அளித்த 21 நாள்கள் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மாலை திகார் சிறையில் சரணடைந்தார். இன்னொருபக்கம், கெஜ்ரிவால் மீதான நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜூன் 5-ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

கெஜ்ரிவால்

இதற்கிடையில், திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களின் முன்னிலையில் உரையாற்றிய கெஜ்ரிவால், “இந்த முறை நான் சிறைக்கு செல்கிறேன். ஆனால், ​​​​எப்போது திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஊழல் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியதற்கு, `அவர் அனுபவமிக்க திருடன்’ என்று மோடி என்னை குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் `ஆதரமில்லையென்றாலும் ஒருவரை சிறையில் வைப்பேன்’ என்ற செய்தியை அவர் தருகிறார். இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராகத் தான் நான் போராடுகிறேன்” என்று கூறினார்.

அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அந்த மாநிலத்தில், தேர்தல் களத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக இருக்கின்றன. இந்தத் தேர்தலில் பாஜக முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பா.ஜ.க வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அதனால், 50 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Arunachal Pradesh

காலை 10 மணி நிலவரப்படி…

பா.ஜ.க – 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

தேசிய மக்கள் கட்சி – 06 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

காங்கிரஸ் – 0 இடத்தில முன்னிலை வகிக்கிறது…

மற்றவை – 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன…

காலை 8 மணி நிலவரப்படி…

பா.ஜ.க – 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

தேசிய மக்கள் கட்சி – 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

காங்கிரஸ் – 1 இடத்தில முன்னிலை வகிக்கிறது…

மற்றவை – 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன…

மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நான்கு மாநிலங்களில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி SKM ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன.

காலை 10 மணி நிலவரப்படி…

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா – 31 இடங்களில் முன்னிலை….

சிக்கிம் ஜனநாயக முன்னணி – 1 இடங்களில் முன்னிலை….

பா.ஜ.க – 0

காங்கிரஸ் – 0

மற்றவை – 0

காலை 8 மணி நிலவரப்படி…

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா – 27 இடங்களில் முன்னிலை….

சிக்கிம் ஜனநாயக முன்னணி – 2 இடங்களில் முன்னிலை….

பா.ஜ.க – 0

காங்கிரஸ் – 0

மற்றவை – 0

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.