இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் சந்தையில் ஜூம் 125 மட்டுமல்ல புதிய டெஸ்டினி 125 என இரண்டு ஸ்கூட்டர்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
125சிசி சந்தையில் தற்பொழுது டெஸ்டினி பிரைம் குறைந்த விலை மாடல் டெஸ்டினி 125 Xtec விற்பனையில் உள்ள நிலையில் ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, சுசூகி ஆக்செஸ் 125 ஆகியவற்றை எதிர்கொள்ள புதிய டெஸ்டினி 125 வரவுள்ளது.
2024 Hero Destini 125
தற்பொழுது விற்பனையில் உள்ள டெஸ்டினி 125 Xtec மாடலுக்கு மாற்றாகவும், புதிய டெஸ்டினி 125 மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
புதிதாக வரவுள்ள மாடல் ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் யமஹா ஃபேசினோ போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் வரக்கூடும். புதிதாக வரவுள்ள மாடலில் அதிகப்படியான ஸ்டோரேஜ் வசதி மற்றும் Xtec சார்ந்த கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற உள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் புதிய டெஸ்டினி 125 விற்பனைக்கு ரூ. 84,000 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலையில் அறிமுகப்படுத்தப்படலாம்.
Hero Xoom 125R
ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற உள்ள ஜூம் 125 ஸ்கூட்டரில் 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 14-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.
புதிய மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய நிலையில் விற்பனையில் உள்ள ஜூம் 110 மாடலை விட மிக நேர்த்தியான மாறுபட்ட டிசைனை பெற்று மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோ ஜூம் 125 விலை ரூ.90,000 விலையில் துவங்கலாம்.
இதுதவிர, ஹீரோ நிறுவன முதல் மேக்சி ஸ்டைல் ஜூம் 160 ஸ்கூட்டர் பண்டிகை காலத்துக்கு முன்பாக விற்பனைக்கு கிடைக்கலாம்.