லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் வெயில்தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எந்தெந்த தொகுதிகளில் எத்தனை தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்துஅறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.
ஏழாம் கட்ட தேர்தல் பணிக்காக 1,08,349 தேர்தல் பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது.