விற்பனையில் சாதனை படைக்கின்ற கியாவின் கேரன்ஸ் எம்பிவி

விற்பனைக்கு வெளியிடப்பட்ட 27 மாதங்களில் சுமார் 1.50 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையை கேரன்ஸ் எம்பிவி கார்களை கியா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள கேரன்ஸ் மாடலுக்கு சவாலாக குறைந்த விலையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர், மாருதி எர்டிகா , XL6, டொயோட்டா ரூமியன் ஆகியவற்றுடன் பேஸ் வேரியண்ட் இன்னோவா கார்களையும் எதிர்கொளுக்கின்றது.

கேரன்சில்  1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. தற்பொழுது 2024 கேரன்ஸ் மாடல் விலை ரூ.10.52 லட்சம் முதல் ரூ.19.67 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது.

43 % வரவேற்பினை பெற்றுள்ள டீசல் என்ஜின் உள்ள மாடல்களை விட பெட்ரோல் என்ஜினுக்கு கூடுதலாக அதாவது 57 % வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த காரை தேர்ந்தெடுப்பவர்களில் 63 % பேர் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தேர்வு செய்கின்றனர். டாப் வேரியண்ட் மற்றும் பேஸ் வேரியண்ட் என இரண்டும் 50;50 என்ற விகிதத்தில் தேர்வு செய்துள்ளனர்.

கியா இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி மியுங்-சிக் சோன் பேசுகையில், “கேரன்ஸ் இந்திய குடும்பங்களுக்கு பிடித்தமானதாக மாறியுள்ளது, ஒவ்வொரு பயணத்திலும் அவர்களுக்கு ஸ்டைலையும் மன அமைதியையும் வழங்குகிறது. இது இப்போது எங்கள் மாதாந்திர உள்நாட்டு விற்பனையில் தோராயமாக 15% ஆக பதிவு செய்துள்ளது. இந்த மாடலின் புகழ் வரும் ஆண்டுகளில் மேலும் வளரும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் உயர்தர வாகனங்களைக் கொண்டு வருவதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.