2023 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் அந்தோணி தாசனிடமிருந்து டாப் 10 இளைஞருக்கான விருதை யாழிசை கலைஞர் தருண் சேகர் பெற்றார்.
அவ்விழா மேடையில் பேசிய தருண் சேகர், “அனைவரும் போல எனக்கும் மேற்கத்திய இசை மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. முதலில் கிடார் மற்றும் அதனைச் சார்ந்த இசைக்கருவிகளைதான் உருவாக்கிக் கொண்டிருந்தேன். பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் கீழடி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் யாழை உருவாக்கலாமா என்று கேட்டார். அதன் பிறகு யாழை உருவாக்கத் தொடங்கினேன். சில ஆராய்ச்சிகளை எல்லாம் மேற்கொண்டு பழைமையான ஒவ்வொருவகை யாழையும் மீட்டு எடுத்தேன்” என்று சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். விழா மேடையில் தருண் சேகர் பேசியதையும், அந்தோணி தாசன் பேசியதையும் முழுமையாகக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.