இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டும் 18-வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துவரும் போதிலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவே பெரும்பாலும் வாகை சூடி வருகிறது. இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிக முக்கியமாக, சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தற்காலிமாக ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசார பேச்சும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவை அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலில் அனுதாப ஓட்டாக கிடைக்கும் என ஆம் ஆத்மி எதிர்பார்த்தது. ஆனால், தற்போதைய தேர்தல் கள நிலவரம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியிருக்கிறது.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சாந்த்னி சௌக்(Chandni Chowk), புது டெல்லி(New Delhi), டெல்லி கிழக்கு(East Delhi), டெல்லி வட கிழக்கு(North-East Delhi), டெல்லி மேற்கு(West Delhi), டெல்லி வட மேற்கு(North-West Delhi), டெல்லி தெற்கு(South Delhi) ஆகிய 7 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர். இந்தியா கூட்டணி சார்பில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் 3 தொகுதிகளில் காங்கிரஸிம் டெல்லியில் போட்டியிடும் நிலையில், இரு கூட்டணி கட்சிகளுமே தங்களின் தொகுதிகளில் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. தற்போது பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், தேர்தல் முடிவிலும் இந்த நிலை தொடர்ந்தால் பாஜக மீண்டும் டெல்லியைத் தனது கோட்டையாக தக்கவைக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88