காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

புதுடெல்லி: பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 01 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், கதூர் ஷாகிப் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைதான அமிரித் பால் சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சி சார்பாக லால்ஜித் சிங் புல்லார், பாஜக சார்பாக மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் அம்ரித் பால் சிங் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை விட 1,00,056 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் அம்ரித்பால் சிங்.

பாடகரும், ஆர்வலருமான தீப் சித்து ‘‘வாரிஸ் பஞ்சாப் தே (பஞ்சாபின் வாரிசுகள்)’’ என்ற இயக்கத்தை உருவாக்கினார். சித்து சாலை விபத்தில் இறந்த பிறகு ஹர்ஜீத் சிங் உதவியுடன் அந்த இயக்கத்தின் தலைவராக அம்ரித்பால் சிங் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.