புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளையும், ‘இந்தியா’ கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால், அது தவறாகி போயுள்ளது. ஆளும் பா.ஜ.க., 272 என்ற பெரும்பான்மைக்கான வெற்றியை தனிக்கட்சியாக பெற முடியாமல் போனது. எனினும், ஒருசில மாநிலங்கள் பாஜகவுக்கு அபார வெற்றியை கொடுத்துள்ளன
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்த மாநிலங்கள் விபரம்:
மத்தியப் பிரதேசம் – மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுகளில் அனைத்தையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
குஜராத் – குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
சத்தீஸ்கர் – சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
பீகார் – பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 ஐ கைப்பற்றிய பாஜக, கர்நாடகாவில் 28-ல் 19ஐ கைப்பற்றியுள்ளது.
* ஆந்திரா – 21 / 25 தொகுதிகளை கைப்பற்றியது
* ஜார்கண்ட் – 9 / 14 தொகுதிகளை கைப்பற்றியது
* ராஜஸ்தான் – 14 / 25 தொகுதிகளை கைப்பற்றியது
* உத்தரகாண்ட் – 5 / 5 தொகுதிகளை கைப்பற்றியது
* இமாச்சல் – 4 / 4 தொகுதிகளை கைப்பற்றியது
* டெல்லி – 7 / 7 தொகுதிகளை கைப்பற்றியது
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருவதுடன், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.