இந்திய சந்தையில் தயாரிக்கப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டஸ் மற்றும் டைகன் என இரு மாடல்களில் உள்ள அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கியுள்ளது. முன்பாக டாப் வேரியண்டில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
குறிப்பாக Global NCAP பாதுகாப்பு சாதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற டாப் வேரியண்டுகளை தொடர்ந்து இரண்டு ஏர்பேக் மட்டும் பெற்றிருந்து குறைந்த விலை வேரியண்டுகளிலும் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் தற்பொழுது 6 காற்றுப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மாணிட்டர், பின்புறத்தில் பார்க்கிங் சென்சார், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் மவுண்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1 லட்சம் கார்களில் 61 % டைகன் எஸ்யூவி மாடலாகும். மேலும் 40 % வாடிக்கையாளர்கள் சாதாரண வேரியண்ட்டை விட GT வகைகளை தேர்ந்தெடுப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடல்களும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளன.
- ஃபோக்ஸ்வேகனின் டைகன் எஸ்யூவியின் விலை ரூ.11.69 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்),
- விர்டஸ் ரூ.11.55 லட்சம் முதல் ரூ.19.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)
விர்டஸ் செடான் ரக மாடலுக்கு சவாலாக இந்தியாவில் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளன.