Election 2024: தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி தலா ஒரு இடத்தில் முன்னிலை!

திருச்சி தபால் வாக்கு எண்ணைக்கையில் துரை வைகோ முன்னிலை!

திருச்சி மக்களவைத் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ முன்னிலை. அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் தொடர்கிறார். அதேபோல், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை.

தமிழ்நாட்டில் 13 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை!

மத்திய சென்னை, வடசென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 13 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை.

திருமாவளவன், சு.வெங்கடேசன், டி.ஆர்.பாலு முன்னிலை!

சிதம்பரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களான திருமாவளவன், சு.வெங்கடேசன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை.

நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் கைகுலுக்கிக் கொண்ட காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள்!

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேரில் சந்தித்துக்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பா.ஜ.க.வேட்பார் நயினார் நாகேந்திரன் கைகுலுக்கி ஒருவொருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை!

அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்துக்கு தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வருகை!

காரைக்குடி காளியம்மமன் கோயிலில் கார்த்தி சிதம்பரம் வழிபாடு!

வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கம் நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி காளியம்மன் கோயிலில் காலையிலேயே வழிபட்டார்.

சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது!

புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து துணை ராணுவப்படையினரை வெளியேற்றிய போலீஸ்!

புதுச்சேரியில், மகளிர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் துணை ராணுவப்படையினர் செல்போன்களைக் கொண்டு வந்ததற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துணை ராணுவப்படையினரை போலீஸார் கல்லூரி நுழைவாயிலிருந்து வெளியேற்றியதால் பரபரப்பு நிலவியது. தற்போது காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் திறப்பு!

சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா மேற்பார்வையில் திறக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தந்த தாரகை!

கன்னியாகுமரி விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை.

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் சோதனைக்குப் பின் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஞ்சல் வாக்குகள் பெட்டி!

திண்டுக்கல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெறப்பட்ட அஞ்சல் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பாஜக Vs இந்தியா கூட்டணி என இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில், ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே தமிழ்நாட்டின் 40 தொகுதிகளுக்கும் (புதுச்சேரி 1 தொகுதி உட்பட) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், தி.மு.க தலைமையிலான கூட்டணி (காங்கிரஸ், CPM, CPI, வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி (தே.மு.தி.க, புதிய தமிழகம், SDPI), பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, ஐ.ஜெ.கே, இ.ம.க.மு.க, த.ம.மு.க, ஓ.பி.எஸ் (சுயேச்சை) ), நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான்

இதில், தி.மு.க 22 தொகுதிகளிலும், அ.தி.மு.க 33 தொகுதிகளிலும், பா.ஜ.க 21 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் போட்டியிட்டிருக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற 39 இடங்களிலும் வெற்றிபெற்ற இதே தி.மு.க கூட்டணி (ஐ.ஜெ.கே தவிர), தற்போது தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் அங்கமாகக் களமிறங்கியிருக்கிறது.

அதேசமயம், கடந்த தேர்தலில் ஓர் அணியில் இருந்த அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க ஆகிய நான்கு பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் இரண்டு வெவ்வேறு கூட்டணியாகப் போட்டியிட்டிருக்கின்றன. இவ்வாறாக தமிழ்நாட்டில் கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் தொடர்பானஇன்ஸ்டன்ட் அப்டேட்களுக்கு விகடன்.காமில் இணைந்திருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.