ஹீரோவின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஜூம் காம்பேட் எடிசன் விற்பனைக்கு ரூ.86,528 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெட் ஃபைட்டர் விமானங்களின் பாடி கிராபிக்ஸை உந்துதலாக கொண்ட பாடி கிராபிக்ஸ் உன் ZX வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ளது.
என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளதை காம்பேட் எடிசனை பற்றி நாம் சில நாட்களுக்கு முன்பாக பிரத்தியேகமான முறையில் வெளியிட்டிருந்த தற்பொழுது அதிகார்ப்பூர்வ அறிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ளது.
ஜூம் காம்பேட்டில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜின் என்ஜின் 7250rpm-ல் 8 bhp பவர், 5,750rpm-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் i3s நுட்பத்துடன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்டு சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.
மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்பக்கத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கினை கொண்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது. முன்புற சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 100/80-12 56L (VX,ZX and Combat) மற்றும் LX 90/90-12 54J பெற்றுள்ளது.
- Xoom LX – ₹ 77,070
- Xoom VX – ₹ 80,428
- Xoom ZX – ₹ 85,528
- Xoom Combat Edition – ₹ 86,528
(Ex-showroom Price in Tamil Nadu)
இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா டியோ 110 ஆகியவற்றுடன் மற்ற 110சிசி ஸ்கூட்டரைகளை ஜூம் எதிர்கொள்ளுகின்றது.