எவருடைய அனுசரணைகளுமின்றி மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் மிகவும் முக்கியமானது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஹோமாகம கல்வி வலயத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் 100 வழங்குதல் சஜித் பிரேமதாசவின் அனுசரணையுடனா மேற்கொள்ளப்படுகிறது? என்பது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் முன்வைத்த் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஹோமாகம கல்வி வலயத்தில் தாம் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மேல் மாகாணத்தில் 11ஆவது இடத்தில் இருந்தாலும் தற்போது 5ஆவது இடம் வரை காணப்படுவதுடன், அதற்காக வெளிப்படையாக அர்ப்பணிப்பாக அதன் பெறுபேறாக இதனை சுட்டிக்காட்டினார்.
பாரிய ஆராய்ச்சி, விசேட அறிக்கை, தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை என்பவற்றின் அடிப்படையிலிருந்து நாட்டின் பிள்ளைகளின் கல்வி தொடர்பாகதீர்மானம் எடுக்கும் போது செயற்படுவதாகவும் தான் முன்னால் கல்வி அமைச்சராக அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய கல்வி புதிய கொள்கையின் கீழ் கல்வி மாற்றம் தொடர்பான சிபாரிசுகள், கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அமைச்சரவை உப குழுவின் மற்றும் விசேட குழுக்கள் அனைத்தினதும் சிபாரிசுகளுக்கு இணங்க இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாட்டில் உயர் தரத்தில் விஞ்ஞானம், கலை மற்றும் வர்த்தக பிரிவுகள் என மூன்று காணப்பட்டத்துடன், நாட்டில் கலைத் துறையிலேயே அதிகமான பிள்ளைகள் பட்டதாரிகளாக 50% வீதத்திற்கு மேல் உருவாகினார்கள்.
அதன் பிரதிபலிப்பாக பட்டப்படிப்பில் சித்தி அடைந்த தொழில் அற்ற மேலும் தொழிலுக்குப் பொருத்தமான பட்டதாரிகள் உருவாகவில்லை.
அதன்படி பரீட்சையை மையமாக வைத்து கல்வி முறை, மனித வளத்தை உருவாக்குவதற்கு போதாது என்றும், அதனூடாக பரீட்சை சித்தி – வாழ்க்கை தோல்வி ஏதும் பிள்ளைகள் உருவானதாகவும் குறிப்பிட்ட அமைச்சர்,
தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் புதிய தொழில்நுட்பப் பாடங்கள் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் சகல அதனுடன் சம்பந்தப்பட்ட வசதிகள் மற்றும் தரத்திலான 1000 மகிந்தோதய ஆய்வு கூடங்கள் நாடு பூராகவும் பாடசாலை கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு இடம்பெற்றதாகவும், தற்போது அதிகமான பிள்ளைகள் தொழில்நுட்ப பாடத்தை கற்பதன் ஊடாக அவர்களின் எதிர்கால செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருக்கும் என்றும் அமைச்சர் விபரித்தார்.
இது தொடர்பாக தொடரட்டும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“பருத்தித் துறை முதல் தேவி துவர வரை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மூன்று பாடசாலைகள் வீதம் 1000 மகிந்தோதிய தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் இரண்டு மாடிக் கட்டிடமாக 40 கணணிகளுடன் தொழில்ப ஆய்வுக்கூடம், 20 கணினிகளுடன் மொழி ஆய்வுகூடம், ஒரு கணித ஆய்வுக்கூடம் என தொலைக் கல்விப் பிரிவாக நான்கு வகுப்பறைகள் என்பவற்றுடன் ஒரு பாடசாலைக்கு 62 கனணிகள் உள்ளடக்கியதாக இந்த ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
மேலும் எமது காலத்தில் தொழில்நுட்பம் எப்போதுமே இல்லாது இருந்தமையினால் பொறியியல் தொழில்நுட்பத்திற்காக முதல் தளம் இயந்திரங்களுடனும் இரண்டாவது தளம் உயிரியல் முறை தொழில்நுட்ப உபகரணங்களுடனும், தொழிற்பப் பாடங்களைக் கற்கும் பிள்ளைகளுக்கு 04 வகுப்பறைகள் வீதம் 251 தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் இந்த 251 பாடசாலைகளில் காணப்படுகின்றன.
மூன்று பீடங்கள் தான் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்பட்டன. ஆனால் தற்போது தொழில்நுட்ப பீடங்கள் காணப்படுகின்றன. இதனால் தொழில்நுட்ப பாடங்களைக் கற்ற பட்டதாரிகள் உருவாகிறார்கள். குறுகிய காலத்திற்குள் அதிகமானவர்களிடம் தொழில்நுட்ப பாடங்களுக்கே கேள்வி காணப்படுகின்றது.
இதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கப்பட்டமை தொடர்பாக அவை ஊடகங்களில் பிரச்சாரங்கள் வழங்கவில்லை. மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஏனையவர்கள் 1000 ஆய்வுக்கூடங்களையும் புனர்நிர்மாணம் செய்யும் போது நாடு முழுவதும் எனக்கும் எஸ் பி திசாநாயக்க அவர்களுக்கும் எதிராக பல சுவரொட்டிகளை ஒட்டி இருந்தன.
அதற்கு அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் கல்வி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் இதற்காக உதவி செய்தன.
ஏனையவர்கள் உதவி செய்யாவிடினும் பாரிய அழுத்தங்களை வழங்கியது போல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தொழிற்சங்கத் தலைவர்களினால் 1000 மஹிந்தோதயா ஆய்வு கூடங்களில் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் 1000 மில்லியன் ரூபாய்களை என்னுடைய பாராளுமன்ற கணக்கிற்கு வரவு வைத்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழுவிற்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் தனக்கு அதில் தப்பா விப்ராயங்கள் கிடைத்தாலும் நாட்டின் கல்வியில் ஒரு இலட்சம் மாற்றத்தை உருவாக்க முடிந்ததாக அமைச்சர் மேலும் விவரித்தார்.