கல்விக் கொள்கையை வினைத்திறன் மற்றும் சேத்திரன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிர்வாக அமைப்பொன்றை நிறுவும் நோக்கில் கல்விக் கொள்கை கட்டமைப்பை சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை வரைபைத் தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியமித்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளுக்கு இணங்கசகல கல்வி சீர்திருத்தத்தை வினைத்திறன் மற்றும் செயல்திறன் மிக்கதாக செயற்படுத்துவதற்குப் பொருத்தமான கல்வி நிர்வாக அமைப்பை நிறுவும் நோக்கில், சர்வதேச தரத்தில் பாடசாலைகளை வகைப்படுத்துதல், கல்வி சீர்திருத்த பிரிவுகளை ஒன்பது மாகாணங்களில் நிறுவுதல், வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை விஞ்ஞான மற்றும் முன்னுரிமை அடிப்படையில் 100 மற்றும் 122 வரையான கட்டங்களாக அதிகரித்தல், பாடசாலைகளுக்குக் களவிஜயம், ஆசிரியர்கள் மேற்பார்வை மற்றும் பாடசாலை முன்னேற்ற மதிப்பீடுகளில் செல்லுபடியாகுதலை உறுதிப்படுத்துவதை நோக்காக ப தற்போது காணப்படும் கோட்டக் கல்வி அலுவலகங்கள் 314 ஐ உள்ளடக்கியதாக 350 பாடசாலை சபைகளை நிறுவுதல், தெரிவு செய்யப்பட்ட இடைநிலைப் பாடசாலை ஒன்று அல்லது சிலவற்றை முன்னணி பாடசாலைகளாக பெயரிட்டு ஒரு பிரிவில் எட்டு தொடக்கம் 12 பாடசாலைகள் வரையான தொகையில் சகல பாடசாலைக் கட்டமைப்பிலும் 12 20 பாடசாலைக் குழுக்களை உருவாக்குதல், இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் ஆசிரிய ஆலோசகர் சேவை போன்றவற்றுக்கு அவசியமான அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் போன்ற விடயங்களுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.