T20 உலகக் கோப்பை 2024 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஜூன் 9 ஆம் தேதி மோத உள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு கெட்ட செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இதை கேப்டன் பாபர் அசாம் உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி ஜூன் 6ம் தேதி போட்டியில் முதல் போட்டியில் விளையாட உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி மெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இமாத் வாசிம் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பயிற்சியின் போது காயம்
அண்மையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடியது. இந்த தொடரின் நடுப்பகுதியில், ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு விலா எலும்பில் வலி இருந்ததால், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் போட்டியில் இருந்து அவர் விலகுவதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாபர் ஆசம் என்ன சொன்னார்?
அமெரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் தொடக்க ஆட்டத்திற்கு முன் பேட்டியளித்த பாபர், ‘இமாத் வாசிம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அதேநேரத்தில் பயப்படும் அளவுக்கான காயமும் இல்லை. காயத்தில் இருந்து இமாம் வாசிம் முன்னேறிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மருத்துவக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். எனவே முதல் போட்டிக்கு இல்லை. ஆனால் மீதமுள்ள போட்டிகளுக்கு அவர் இருப்பார் என்று நம்புகிறோம் என கூறினார்.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சாம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷாஹ்மான் அஃப்ரிடி மற்றும் உஸ்மான் காந்தி.