நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அந்தக் கட்சியின் மாநிலத் அண்ணாமலை. அப்போது நாம் தமிழர் கட்சியைப் பாராட்டியிருப்பதும்… நா.த.க, பா.ஜ.க-வை ஒப்பிட விரும்பவில்லை என்றும் பேசியிருப்பது, அரசியல் களத்தில் கவனம்பெற்றுள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால், கட்சியை கலைத்துவிட்டுச் செல்கிறேன்” என சவால்விட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை “தாமரை சின்னத்தில் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் 23 தொகுதிகளில் நாங்கள் பெறும் வாக்குகளுக்கு பக்கத்தில் நாம் தமிழர் கட்சி வரட்டும் பார்க்கலாம்” என்றதோடு, “இந்த விதண்டா வாதத்துக்கு நான் வரவில்லை. தேவையில்லாமல் அவர் ஏன் இந்த போட்டிக்கு வருகிறார் எனத் தெரியவில்லை” என்றார்.
இத்தகைய சூழலில், நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைப் பெற்று மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது. பா.ஜ.க, கூட்டணியாக 18 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சிந்தாந்த அடிப்படையில் முரண்பட்டாலும் நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் நேர்மையாக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார்கள். அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் புது சின்னத்தில் நின்றதை நான் பாராட்டுகிறேன். திராவிடத்திலிருந்து தமிழ்நாட்டு மக்கள் வெளியேறுகிறார்கள் என்பது நாம் தமிழர் கட்சி சொல்லும் செய்தி. அவருடைய பாதையில் அவர் பயணிக்கட்டும், எங்கள் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம் எனவே இருவரின் வாக்குகளையும் ஒப்பிட விரும்பவில்லை” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டதற்கே பாஜக தான் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் பேசிவரும் நிலையில், புதுச் சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்த நா.த.க-வை பாராட்டியிருக்கிறார் அண்ணாலை. 2024-க்குப் பிறகு நா.த.க-வே இருக்காது எனக் கடந்த காலங்களில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb