நாடு பூராகவும் அமைந்துள்ள உள்நாட்டு வைத்திய பீடங்கள் நான்கின் 204 பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (03) உள்நாட்டு வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜெயக்கொடியின் தலைமையில் மகரகம நாவின்னவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றது.
நாடு பூராகவும் அமைந்துள்ள 105 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒரு வருட கால உள்ளகப் பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட இப் பயிலுனர்களுக்கு மாதாந்தம் 66,750 ரூபா பயிற்சிக் கொடுப்பனவாக அரசாங்கத்தினால் வழங்கப்படும்.
ஒழுங்கு முறையின் கீழ் சகல உலகப் பயிற்சி யாளர்களுக்கும் பயிற்சியை வழங்குவதற்கான வேலை திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மற்றும் ஒரு குழுவினர் இப்பச்சிக்காக நியமிக்கப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது