ஸ்டீபன் நைட் எழுத்தில் ஓட்டோ பாதர்ஸ்ட், டாம் ஹார்பர் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி, சாம் நெய்ல், ஹெலன் மெக்ரோரி உள்ளிட்டோர் நடிப்பில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியான க்ரைம் திரில்லர் வெப்சீரிஸ் ‘Peaky Blinders’.
2013ம் ஆண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான இந்த கேங்ஸ்டர் வெப்சீரிஸுக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதன் வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சிலியன் மஃர்பிக்கு இந்த வெப்சீரிஸ் ரசிகர் பட்டாளத்தையும், நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் Netflix, “‘Peaky Blinders’- சீரியஸில் சிலியன் மஃர்பி, தாமஸ் ஷெல்பியாக திரும்பி வருகிறார்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் ‘Peaky Blinders’ வெப்சீரிஸ் புதிய கதைக்களத்தில் உருவாவதை வரவேற்று சமூக வலைதளங்களில் வருகின்றனர்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ‘Peaky Blinders’-ன் இயக்குநர் டாம் ஹார்பர், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெப்சீரிஸை இயக்க ஆரம்பித்தபோது இதற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதன் கதையை எழுதும்போது தீப்பொறிகள் வெடித்தன. எழுத்தில் இருந்த தீப்பொறி அப்படியே திரையிலும் வெடித்தது. குறிப்பாக நடிகர்கள் சரியாக அமைந்தது பெரும் பலமாக இருந்தது.
மீண்டும் அதே நடிகர்கள், இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிபிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். ரசிகர்களுக்காக மட்டுமே நாங்கள் மீண்டும் இணைந்துள்ளோம்” என்று பேசியிருக்கிறார்.