நாட்டின் சந்தையில் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில் 44,430 வாகனங்கள் வெளிவந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
இதனிடையே 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்களும் உள்ளடங்குவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற் கலந்துரையாடலொன்றின் போது இந்தத் தகவல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன இறக்குமதிக்காக மட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் பாகங்களை பொருத்தி விற்பனை செய்யும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இக்கலந்துரையாடலுக்காக உள்நாட்டு ரீதியாக மோட்டார் வாகன உற்பத்தி மேற்கொள்ளும் கம்பனிகள் சில பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன் போக்குவரத்து வாகன இறக்குமதிக்காக அனுமதி வழங்குதல் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இவற்றுக்காக இறக்குமதி மட்டுப்பாடு நீக்கப்படும் போது உள்நாட்டு பொருத்தும் வியாபாரம் தொடர்பாகவும் கருத்திற்கொள்ளுதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் மோட்டார் வாகன உற்பத்திக்காக இவ்விறக்குமதி வரையறையை ஏற்படுத்துதல் ஏதேனும் உந்துதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர்;, நாடு ஒன்று வாகன உற்பத்தியை ஆரம்பித்தல் என்பது நீண்டகால நிலைபேறான செயற்பாடு எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் உள்நாட்டு உற்பத்தியை வலுப்டுத்துவதற்காக அரசாங்கம் எப்போதும் தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுட்டிக்காட்டினார்.