இலங்கை – மேற்கிந்தியதீவு பெண்கள் அணிகள் மோதும் போட்டிகள் இடம்பெறும் மைதானங்களில் மாற்றம்

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் முதலாவது அட்டவணையின்படி, முதல் 3 ஒருநாள் போட்டிகள் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருந்தது. எனினும் தொடர் மழை காரணமாக மைதானங்களை சீர்செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் 3 போட்டிகளையும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்த இரு நாட்டு நிர்வாகமும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

ஜூன் 15, 18 மற்றும் 21 ஆகிய திகதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், ஜூன் 24, 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.