இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான அல்ட்ரோஸ் காரில் கூடுதலாக XZ LUX மற்றும் XZ+S LUX வேரியண்ட் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள XZ LUX வகையில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற XZ காரின் அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், 360 டிகிரி கேமரா மற்றும் வைஃபை வழியாக இணைப்பினை ஏற்படுத்தும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் வருகிறது.
கூடுதலாக, XZ+S LUX ஆனது விற்பனையில் கிடைக்கின்ற XZ+S வகையின் வசதிகளுடன் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், 360 டிகிரி கேமரா மற்றும் வைஃபை மூலம் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.
அல்ட்ரோஸ் XZ+ OS ஆனது XZ+S LUX அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக iRA கனெக்டேட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவற்றைப் பெறுகிறது.
மற்றபடி, முந்தைய ஐ-டர்போ வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக அல்ட்ரோஸ் ரேசர் வெளியாகியுள்ள நிலையில் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.
88hp பவரை வழங்குகின்ற 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர்கள் பெட்ரோல் மற்றும் 90hp பவர், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களில் பொதுவாக 5 வேக மேனுவல் மற்றும் பெட்ரோல் மாடலில் 7 வேக டிசிஏ பெற்றிருக்கும் நிலையில், சிஎன்ஜஇ ஆப்ஷனை பெறுகின்றது.
மாருதி சுஸுகி பலேனோ , ஹூண்டாய் i20 ஆகியவற்றை டாடா அல்ட்ரோஸ் காரில் எதிர் கொள்கின்றது.
- 2024 Tata Altroz XZ+ LUX – ₹ 8.99 லட்சம்
- 2024 Tata Altroz XZ+S LUX – ₹ 9.65 லட்சம்
- 2024 Tata Altroz XZ+ OS – ₹ 9.99 லட்சம்