சென்னை: நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுகவலைதள பதிவில், ’’சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் […]