பெங்களூருவில் முதற்கட்டமாக ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவரியை க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் துவங்கியுள்ளது. 16 வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ள ஆம்பியர் தனது நெக்சஸ் மாடலில் EX மற்றும் ST என இரு வேரியண்டுகளை பெறதாக வெளியிட்டுள்ளது.
நெக்சஸ் ஸ்கூட்டரில் 3Kwh LFP பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 136 கிமீ வழங்கும் என CVMR சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. 15A சார்ஜர் மூலம் 0-100 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக 4Kw பவர் வெளிப்படுத்துகின்ற மோட்டாரை கொண்டுள்ள இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 93 கிமீ ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் டாப் ST மாடலில் 7 அங்குல தொடுதிரை டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட இசைக் கட்டுப்பாடு ஆகியவற்றை பெற்றுள்ளது.
ஆம்பியர் நெக்சஸ் EX – ₹ 1,10 லட்சம்
ஆம்பியர் நெக்சஸ் ST – ₹ 1,20 லட்சம்
(ex-showroom price in tamilnadu)
தற்போது பெங்களூருவில் டெலிவரி தொடங்கியுள்ள நிலையில், நெக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விநியோகம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.விஜய குமார் கூறுகையில், “ஆம்பியர் நெக்சஸ் டெலிவரி தொடங்கப்பட்டதன் மூலம் எங்களது 16வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது நிரந்தரமான போக்குவரத்துக்கான எங்கள் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுளோம் என குறிப்பிட்டுள்ளார்.