பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் மாடலை சேட்டக் ப்ளூ 2901 என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.95,998 (எக்ஸ்ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய அர்பேன் 2024 மாடலை விட கூடுதல் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் 2024 மாடலுக்கு இணையான ரேஞ்ச் வெளிப்படுத்தினாலும், பல்வேறு வசதிகள் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ப்ளூ 2901 ஸ்கூட்டரின் படங்களை முதன்முறையாக வெளியிட்டிருந்த நிலையில் அனைத்து விபரங்களையும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டெக்பேக் வசதிகள் குறைக்கப்பட்டு இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம், மோனோக்ரோம் கிளஸ்ட்டர், வழக்கமான டூ வீலர்களில் இடம்பெறுகின்ற பிசிக்கல் கீ பெற்றுள்ளது. அர்பேன் மற்றும் பிரீமியம் 2024 மாடல்களில் ஃபாப் கீ வசதியுடன் குறைந்த சார்ஜிங் நேரம் பெற்றுள்ளது.
Blue 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.88Kwh லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டு ரேஞ்ச் 123 கிமீ ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ வெளிப்படுத்துகின்றது. ஆஃப் போர்டு சார்ஜர் கொண்டு 6 மணி நேரத்தில் 100 % சார்ஜிங் எட்ட இயலும். டெக்பேக் பெற்ற மாடலும் மணிக்கு 63 கிமீ மட்டுமே வேகத்தை பெற்றிருக்கும் ஆனால் குறைந்த கனெக்ட்டிவிட்டி வசதிகளை மட்டும் பெற்றிருக்கின்றது.
கருப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என 5 விதமான வண்ணங்களை பெற்றதாக கிடைக்கின்ற ப்ளூ 2901 ஸ்கூட்டருக்கு போட்டியாக ஓலா S1X, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா மற்றும் பல்வேறு குறைந்த விலை இ-ஸ்கூட்டர்கள் சவால் விடுக்கின்றன.
- 2024 Bajaj Chetak Blue 2901 STD – ₹ 95,998
- 2024 Bajaj Chetak Blue 2901 Tecpac – ₹ 98,998
- 2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,23,319
- 2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,31,319
- 2024 Bajaj Chetak Premium – 1,47,243
- 2024 Bajaj Chetak Premium Tecpac – ₹, 156,243
(EX-showroom All over Tamil Nadu Price)