Samantha: “தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம்; நானும் அப்படித்தான்" – சமந்தா

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விற்குப் பிறகு கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா.

விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி வந்து ஒருசில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

சமந்தா

இந்நிலையில் ‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்கள் பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். பலரும் சமந்தாவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பேசிய சமந்தா, “எனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான்.

மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சமந்தா

எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.