டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் இருக்கும் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்னறால் அவருக்கு பயிற்சியின்போது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அரைதம் அடித்த ரோகித் சர்மா, போட்டியில் பாதியிலேயே ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

உடனடியாக இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, தேவையான முதல் கட்ட சிகிச்சையை கொடுத்தனர். காயம் முழுமையாக குணமாகிவில்லை என்றாலும் பெரிதாக பயப்படும் அளவுக்கான காயம் இல்லை. இதனால் மீண்டும் பயிற்சியில் இறங்கிய ரோகித் சர்மா, முழுமையாக பேட்டிங் பயிற்சி செய்யவில்லை. முன்னெச்சரிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. இதுதான் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் பயிற்சியின்போது தம்ஸ்அப் காட்டும் ரோகித்சர்மாவின் புகைப்படங்களும் வைரலாகியுள்ளது. 

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற்ற நவுசாவ் கிரிக்கெட் மைதானம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்பதால் அது சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடும் அளவுக்கான தரத்தில் இல்லை. இதுகுறித்து கடந்த போட்டியின்போதே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுட்டிக்காட்டினார். ஐசிசியும் இதனைக் கவனத்தில் கொண்டு, நவுசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் முழுமையானதாக இருக்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மைதானம் சிறப்பாக இருக்கும் வகையில் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஐசிசி முன்னெடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் தான் ஜூன் 9 ஆம் தேதி நவுசாவ் கிரிக்கெட் மைதானத்தில் சந்திக்க இருக்கின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். பாகிஸ்தான் அணி தோற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மேலும் கடினமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.