இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள சேஸிஸ் பிரிட்ஜ் ட்யூப்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து இலவசமாக மாற்றித் தர அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் சேஸ் பகுதியில் உள்ள பிரீட்ஜ் ட்யூபில் விரிசல் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்கூட்டர்களில் ஒரே சமயத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து ஆய்வுக்கு உட்ப்படுத்திய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்பொழுது திரும்ப அழைத்துள்ளது.
ஜூலை 10, 2023 மற்றும் செப்டம்பர் 09, 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட iQube மின்சார ஸ்கூட்டர்களின் பிரிட்ஜ் ட்யூப்பை இந்நிறுவனம் ஆய்வு செய்து, ஏதேனும் விரிசல் அல்லது தயாரிப்பு குறைபாடுகள் இருந்தால், இலவசமாக மாற்றித் தரப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொல்லை இல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக இந்தச் செயலை முன்னெச்சரிக்கையுடன் மேற்கொண்டு வருகிறது. டீலர் பார்ட்னர்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் ST மற்றும் குறைந்த விலை ஐக்யூப் என மூன்று வேரியண்டுகளை வெளியிட்டுள்ளது.
View this post on Instagram