பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது 2901 Blue line, அர்பேன் மற்றும் பிரீமியம் என 3 விதமான வகைகள் கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.98,558 முதல் துவங்குகின்றது.
மூன்று விதமான வகைகளில் மாறுபட்ட வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன குறிப்பாக இந்த மாடல்கள் முழுமையான ஸ்டீல் பாடி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கின்ற மாடலும் கூட ஸ்டீல் பாடி கொண்டதாகவே உள்ளது. மாடல்களை பொறுத்தவரை நாம் சொல்ல வேண்டும் என்றால் நிறங்கள் கூட ரெட்ரோ கிளாசிக் நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக வந்துள்ள 2901 மாடலில் மட்டும் பாடி கிராபிக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது
ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக விலையில் கிடைக்கின்ற பஜாஜ் சேட்டக் 2901 மாடல் கூட 123 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் நிலையில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் விலையில் கிடைக்கின்ற அர்பேன் 2024 மாடலானது நமக்கு 113 கிலோமீட்டர் ரேஞ்ச் மட்டுமே வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு முக்கிய காரணமே இதில் கொடுக்கப்பட்டுள்ள ரிமோட் கீ, குறைந்த நேரத்தில் 100 % சார்ஜிங், ரிவர்ஸ் மோடு உள்ளிட்ட வசதிகள் மற்றும் கூடுதலான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் மட்டுமே காரணமாகும்.
-
Bajaj Chetak 2901 Blue Line
ரூ.95,998 விலை ஆக அறிவிக்கப்பட்டுள்ள 2.88kwh பேட்டரி பேக்கினை பெறுகின்ற சேட்டக் 2901 ப்ளூ லைன் வேரியண்டில் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ எட்டும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 123 கிமீ ரேன்ஜ் வழங்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான பயணிக்கும் ரேன்ஜ் 75 கிமீ வரை கிடைக்கலாம். மேலும் பிசிக்கல் கீ கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் வெள்ளை, கருப்பு, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு பெற்றுள்ளது.
ரூ.3,000 கூடுதல் விலையில் கிடைக்கின்ற டெக்பேக் மாடலும் மணிக்கு 63 கிமீ வேகத்தை எட்டுவதுடன் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் மோடு என இரு ரைடிங் மோடுகள், ஹீல் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், குறைந்தபட்ச ஆப் கனெக்ட்டிவிட்டி மட்டும் பெறுகின்றது.
ஆஃப் போர்டு சார்ஜரை பெறுகின்ற சேத்தக் 2901 ஸ்கூட்டரின் சார்ஜிங் 0-100 % பெற 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
-
2024 Bajaj Chetak urbane
ரூ.1,23,319 விலையில் கிடைக்கின்ற அர்பேன் 2024 மாடலில் 2.9kwh பேட்டரி பெற்று மணிக்கு 63 கிமீ வேகதை எட்டுவதுடன் 113 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும், உண்மையான பயணிக்கும் வரம்பு 90 கிமீ வரை வழங்கலாம். குறைந்தபட்ச கனெக்ட்டிவிட்டி வசதிகள், வட்ட வடிவ எல்இடி ஒளிரும் விளக்கு பெற்று கிரே, பிளாக் மற்றும் ப்ளூ என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
ரூ.8,000 கூடுதல் விலையில் கிடைக்கின்ற டெக்பேக் மாடலும் மணிக்கு 73 கிமீ வேகத்தை எட்டுவதுடன் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் மோடு என இரு ரைடிங் மோடுகள், ஹீல் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், முழுமையான ஆப் கனெக்ட்டிவிட்டி பெறுகின்றது.
ஆன் போர்டு சார்ஜரை பெறுகின்ற சேத்தக் அர்பேன் 2024 ஸ்கூட்டரின் சார்ஜிங் 0-100 % பெற 4 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
-
2024 Bajaj Chetak Premium
ரூ.1,47,243 விலையில் கிடைக்கின்ற பிரீமியம் 2024 மாடலில் 3.2kwh பேட்டரி பெற்று மணிக்கு 73 கிமீ வேகதை எட்டுவதுடன் 126 கிமீ ரேஞ்ச் வெளிப்படுகின்றது. சிங்கிள் சார்ஜில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 105 கிமீ வரை வெளிப்படுத்தலாம். குறைந்தபட்ச கனெக்ட்டிவிட்டி வசதிகள், வட்ட வடிவ எல்இடி ஒளிரும் விளக்கு பெற்று கிரே, பிளாக் மற்றும் ப்ளூ என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
ரூ.9,000 கூடுதல் விலையில் கிடைக்கின்ற டெக்பேக் மாடலும் மணிக்கு 73 கிமீ வேகத்தை எட்டுவதுடன் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் மோடு என இரு ரைடிங் மோடுகள், ஹீல் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், முழுமையான ஆப் கனெக்ட்டிவிட்டி பெறுகின்றது.
ஆன் போர்டு சார்ஜரை பெறுகின்ற சேத்தக் பிரீமியம் 2024 ஸ்கூட்டரின் சார்ஜிங் 0-100 % பெற 4 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
2024 Bajaj Chetak escooter on road price in Tamil Nadu
பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் விபரம்.
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Chetak 2901 | ₹ 95,998 | ₹ 1,06,531 |
Chetak 2901 Tecpac | ₹ 98,998 | ₹ 1,09,821 |
Chetak Urbane | ₹ 1,23,319 | ₹ 1,34,103 |
Chetak Urbane Tecpac | ₹ 1,31,319 | ₹ 1,43,201 |
Chetak Premium | ₹ 1,47,243 | ₹ 1,58,903 |
Chetak Premium Tecpac | ₹ 1,56,243 | ₹ 1,69,211 |
பஜாஜ் சேட்டக் 2901 மாடல் குறைந்தபட்ச விலையில் அதிக வசதிகளுடன் சுமார் 50-70 கிமீ வரை பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக விளங்கலாம். சற்று கூடுதலான ரேன்ஜ் ரிமோட் கீ உள்ளிட்ட பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை வேண்டும் என்றால் அர்பேன் மற்றும் பீரிமியம் மாடல்களில் ஏதேனும் ஒன்றில் வாங்கலாம்.