மோடி தலைமையிலான அரசில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோடி அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவளிக்கவே சந்திரபாபு நாயுடு விரும்புவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆட்சியில் பங்கேற்பது மற்றும் பாலயோகி போன்று சபாநாயகர் பதவிபெறுவது என்பது தெலுங்கு தேசம் கட்சியில் இரண்டு அதிகார மையங்களுக்கு வழி வகுக்கும் என்றும் அதனால் கட்சியை உடைக்கும் வேலையில் கைதேர்ந்த பாஜக-வுக்கு சாதகமாகிவிடும் […]