இன்று மதுரை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமர் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை, ஒரு நாடக நடிகரைப்போல செயல்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி 10 நாள்கள் நிதானமின்றி பேசினார்.
பிரதமர் மோடி திருந்துவதற்கு வழியே இல்லை, செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது, விரைவில் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பிரிந்து செல்வார்கள். நான்தான் எல்லாமே என மோடி செயல்பாட்டால் வீழ்த்தப்படுவார்.
தமிழிசை சௌந்தரராஜனின் தோல்வி, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி உள்ளது. மயிலாப்பூர் வங்கி மோசடி விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் குரல் கொடுக்கவில்லை. அண்ணாமலை கவுன்சிலருக்கு போட்டியிட்டால்கூட வெற்றி பெற முடியாது. கோவையில் நின்று தோல்வியைத் தழுவியுள்ளார். எந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.
வட மாவட்டங்களில் பா.ம.க-வின் வாக்குகள் பா.ஜ.க-விற்கு கிடைத்ததால்தான் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது, தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிகளினால் தமிழகத்தில் பா.ஜ.க-விற்கு வாக்கு உயர்ந்துள்ளது.
பா.ஜ.க தமிழகத்தில் எதிர்க்கட்சிகளாக நினைப்பது தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளைத்தான். கூட்டணிக் கட்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக பா.ஜ.க செயல்படுகிறது, நாணயமான கட்சியாக செயல்படவில்லை,
மோடியின் இழுபறியான வெற்றியின் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது, கடந்தகால வெற்றிகளை ஒப்பிடும்போது பா.ஜ.க தற்போதைய வெற்றியை தோல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும், மோடி, நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டணி முரண்பாடான கூட்டணி. பணத்தை பங்கீடு செய்வதில் மூவருக்கும் முரண்பாடு வராது.
இந்தியா கூட்டணிக்குள் தொகுதி தொடர்பாக சிறு சிறு பிரச்னை இருந்தாலும் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மையில் தெளிவாக உள்ளோம்,
தமிழிசை, எல்.முருகன் மாநில தலைவராக இருந்த காலகட்டத்தை விட பா.ஜ.க தற்போது வலுவிழந்துள்ளது. காமராஜர் ஆட்சிபோல மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார், மலைக்குச் சென்று வந்த பின்னர் ரஜினிகாந்த்திற்கு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி மூன்றாம் முறையாக பதவி ஏற்பது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட வேதனை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb