யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆம்பன் கடற்படை பகுதியில் (2024 ஜூன் 05,) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எழுபது (70) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை (ஈரமான எடை) எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களுடன் (02) ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தைச் சேர்ந்த மாமுனை கடற்படைக் குழுவினால் இன்று (2024 ஜூன் 05,) யாழ்ப்பாணம், நாகர்கோவில் ஆம்பன் கடல் பகுதியில் பகலில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனையிட்டனர்.குறித்த படகில், முப்பத்தொரு (31) பார்சல்களில் (ஈரமான எடை) பொதி செய்யப்பட்ட 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் டிங்கி படகு (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி இருபத்தெட்டு (28) மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் முள்ளியான் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த இரு சந்தேகநபர்கள் (02), கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.