அஞ்சாமை (தமிழ்)

எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணிபோஜன், ரகுமான், கிருத்திக் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஞ்சாமை’. எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் தன் மகனின் டாக்டர் கனவை நிறைவேற்றப் போராடுவதுதான் இதன் கதைக்களம். நீட் நுழைத்தேர்வு, அதைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றிப் பேசும் இத்திரைப்படம் ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Weapon (தமிழ்)

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Weapon’. சயின்ஸ் பிக்ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Haraa (தமிழ்)

விஜய் ஶ்ரீ இயக்கத்தில் மோகன், அனுமோல், கே.மனோஹரன், யோகி பாபு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Haraa’. கதாநாயகன் மோகன் தொடர் கொலைகளில் ஈடுபடுகிறார். அவரை காவல் துறையினர் வலைவீசித் தேடுகின்றனர். இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன, மோகனின் பின்னணி, நோக்கம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Satyabhama (தெலுங்கு)

சுமன் சிக்கலா இயக்கத்தில் காஜல் அகர்வால், நவீன் சந்திரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Satyabhama’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Manamey (தெலுங்கு)

ஶ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் ஷர்வானந்த், கீர்த்தி ஷெட்டி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Manamey’. காதல், காமெடி நிறைந்த இத்திரைப்படம் ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது
Little Hearts (மலையாளம்)

ஆண்டோ ஜோஷ் பெரைரா இயக்கத்தில் ஷேன் நிகம், மஹிமா, ஷைன் டாம் சாக்கோ, பாபு ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Little Hearts’. காதல் திரைப்படமான இது ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Bad Boys: Ride or Die (ஆங்கிலம்)

அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லா இயக்கத்தில் வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ், வனிஷா ஹுட்ஜென்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bad Boys: Ride or Die’. இது பேட் பாய்ஸ் படத்தொடரின் 4வது பாகம். காமெடிகள் நிறைந்த ஆக்ஷன் அட்வென்சர் திரைப்படமான இது ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி
Black Out (இந்தி) – JIO Cinema

தேவங் பாவ்சர் இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, சுனில் குரோவர், மௌனி ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Black Out’. காமெடி திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The End We Start From (இந்தி) – Jio Cinema

மஹாலியா பெலோ இயக்கத்தில் ஜோடி காமர், ஜோயல் ஃப்ரை, யவ்ஸ் ரஸ்ஸோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The End We Start From’. போர் சூழலில் நடக்கும் திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Hit Man (ஆங்கிலம்) – Netflix

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இயக்கத்தில் க்ளென் பவல், அட்ரியா அர்ஜோனா, ஆஸ்டின் அமெலியோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hit Man’. காமெடி நிறைந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்
Gullak Season 4 (இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) – Sony Liv

ஷ்ரேயான்ஷ் பாண்டே, பலாஷ் வாஸ்வானி, அம்ரித் ராஜ் குப்தா ஆகியோரது இயக்கத்தில் ஜமீல் கான், கீதாஞ்சலி குல்கர்னி, வைபவ் ராஜ் குப்தா உள்ளிட்டோர் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான ‘Gullak’ வெப்சீரிஸின் நான்காவது சீசன் இது. மிஸ்ரா என்பவரின் நடுத்தர குடும்பத்தின் ஜாலியான வெப்சீரிஸான இது ‘Sony Liv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Clipped (ஆங்கிலம்) – Disney + Hotstar

ஜினா வெல்ச் எழுத்தில் கெவின் பிரெய், பிரான்செஸ்கா ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Clipped’. ஜாக் மெக்கிசிக், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஜாக்கி வீவர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் சான் டியாகோ/லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டி. ஸ்டெர்லிங்கின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Acolyte (ஆங்கிலம்) – Disney + Hotstar

ஹனெல்லே, கல்பெப்பர், அலெக்ஸ் கார்சியா லோபஸ், லெஸ்லி ஹெட்லேண்ட், கோகோனாடா ஆகியோரது இயக்கத்தில் அமண்ட்லா ஸ்டென்பெர்க், டாஃப்னே கீன், ஜோடி டர்னர்-ஸ்மித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார் வார்ஸ்’ யுனிவர்ஸ் வெப்சீரிஸ் ‘The Acolyte’. ஆக்ஷன், அட்வென்சர் நிறைந்த இந்தத் தொடர் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sweet Tooth: Season 3 (ஆங்கிலம்) – Netflix

ஜிம் மிக்கிள், டோ ஃப்ரேசர், ராபின் கிரேஸ் ஆகியோரது இயக்கத்தில் நோன்சோ அனோசி, கிறிஸ்டியன் கான்வரி, அடீல் அக்தர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Sweet Tooth: Season 3’. இதன் முந்தைய சீசன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பேண்டஸி, ஆக்ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த மூன்றாவது சீசன் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Hierarchy (கொரியன்) – Netflix

ஹை லிம் சூ, பே ஹியோன் ஜின் ஆகியோரது இயக்கத்தில் யுயுகி லூனா, ஹாரிசன் சூ, நோ ஜியோங்-ஈ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Hierarchy’. காதல், ஆக்ஷன் திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
Boomer Uncle (தமிழ்) – Aha

சுதேஷ் எம்.எஸ் இயக்கத்தில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Boomer Uncle’. காமெடி திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வர்ஷங்களுக்கு சேஷம் (மலையாளம்) – Sony Liv

வினித் சீனிவாசன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’. இப்படத்தில் பிரணவ் மோகன்லால், தியான் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன், பசில் ஜோசப், ஒய்.ஜி.மகேந்திரன், நிவின் பாலி உட்படப் பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத்தின் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் ‘Sony Liv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Maidaan (இந்தி) – Amazon Prime Video

இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலமான 1951 – 62 ஆண்டுகளில் எஸ்.ஏ.ரஹீம் என்ற பயிற்சியாளர் உருவாக்கிய இந்திய அணி செய்த சாதனைகளை ரத்தமும் வியர்வையுமாக கண்முன் நிறுத்தும் முயற்சியே இந்த பயோபிக். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். அஜய் தேவ்கன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bade Miyan Chote Miyan (இந்தி) – Netflix

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bade Miyan Chote Miyan’. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.