மன்னார் மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள்   ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள்  மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன்   தலைமையில் இன்று (10) ஆரம்பமானது.

மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்களுக்கும்  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 கிராம அலுவலர்களுக்கான  03 மாதகால பயிற்சி  இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும்,  நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும், முசலி பிரதேச செயலத்துக்கு 7பேரும், மடு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும்  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.