போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன என்று ரயில்வே பிரதி; பொது முகாமையாளர் ஜே. என். இந்திபொலகே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் முடிவடைந்தாலும், இன்று பிற்பகல் ரயில் போக்குவரத்தில்; சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என்றும், நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைபோல் இயங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.