Imran Khan: "விவாகரத்துக்குப் பின் காதல்; குழந்தையை இருவரும் பார்த்துக் கொள்கிறோம்" – இம்ரான் கான்

‘டெல்லி பெல்லி’, ‘கட்டி பட்டி’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் இம்ரான் கான். 

இவர் 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மனக் கசப்பின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிற்கு இம்ரான், தொகுப்பாளரும், தமிழில் ‘ஜெயம்கொண்டான்’, ‘வா (குவாட்டர் கட்டிங்)’, ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படங்களில் நடித்தவருமான லேகா வாஷிங்டன் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதையடுத்து இம்ரான் கானே இருவரும் காதலிப்பதைப் பொதுவெளியில் அறிவித்தார். 

இம்ரான் கான், அவந்திகா மாலிக்

இந்நிலையில் தனது விவாகரத்து குறித்தும் காதலி லேகா வாஷிங்டன் குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நானும் அவன்திகா மாலிக்கும் விவாகரத்துப் பெற்றோம். அந்த நாள்கள் எனக்கு மிகக் கொடுமையான நாள்களாக இருந்தன. ஒருவாரம் நான் விட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லவில்லை. 

வீட்டின் கதவு, ஜன்னல், காலிங் பெல் அனைத்தையும் ப்ளாக் செய்துவிட்டு தனிமையாக இருந்தேன். என் படுக்கையறையிலேயே மிகுந்த மன அழுத்தத்துடன் படுத்திருந்தேன். பிறகு, அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியில் வர ஆரம்பித்தேன். பிறகுதான், எனக்கும் லேகா வாஷிங்டனுக்கும் நட்பு ஏற்பட்டது. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. எனக்குப் புதிய வாழ்க்கைக் கிடைத்ததுபோல் இருந்தது. கோவிட் காலத்தில் நானும் லேகாவும் ஒன்றாக தங்கியிருந்தோம். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இம்ரான் கான், லேகா வாஷிங்டன்

விவாகரத்துக்குப் பிறகு என் குழந்தையை நானும், அவன்திகா மாலிக்கும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கிறோம். பெற்றோராக எங்கள் குழந்தைக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.