Thuppakki: ”டாப் ஹீரோக்கள்கூட நடிச்சிருக்கேன்… ஆனா, விஜய் சார்கிட்ட மட்டும்தான்!” – சத்யன்

விஜய்யின் பிறந்தநாளுக்கு பல சர்ப்ரைஸ்கள் காத்துக்கொண்டிருந்தாலும் அவர் நடித்து மாஸ் ஹிட் அடித்த ‘துப்பாக்கி’ பட ரீ ரிலீஸ்தான் ரசிகர்களின் மத்தியில் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ சொல்லவைத்து மீண்டுமொரு ஹேப்பியான கொண்டாட்டத்துக்குத் தயாராக்கியிருக்கிறது.

இந்தநிலையில், துப்பாக்கி படத்தில் போலீஸ் நண்பனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் சத்யனிடன் படம் குறித்த மறக்கமுடியாத அனுபவங்களைக் கேட்டேன்…

“விஜய் சார்க்கூட ‘வேட்டைக்காரன்’, ‘அழகிய தமிழ்மகன்’, ’நண்பன்’, ’துப்பாக்கி’, ’புலி’, ’மெர்சல்’னு கிட்டத்தட்ட 6 படங்கள் நடிச்சேன். அதுல, ’நண்பன்’ படத்தில் வரும் கேரக்டர்தான் ரொம்பவே பேசப்பட்டது. அதுல, நான் தான் மெயின் வில்லன் மாதிரி.

விஜய்

’துப்பாக்கி’ படத்துல காமெடி ரோலும் கேரக்டர் ரோலும் சேர்த்து பண்ணியிருப்பேன். க்ளைமாக்ஸ்வரை விஜய் சார் கூடவே ட்ராவல் பண்ணியிருப்பேன். மிக முக்கியமான ரோல் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. விஜய் சார், இந்த ரெண்டு படத்துலயுமே என் நடிப்பைப் பார்த்து ரொம்ப எஞ்சாய் பண்ணி பாராட்டினார். அவரோட, டாப் மெகா ஹிட் படத்துல துப்பாக்கியும் ஒன்று. ’நண்பன்’ படத்துல நடிச்சிக்கிட்டிருக்கும்போதே ’துப்பாக்கி’ பட வாய்ப்பு வந்துடுச்சு. ஏற்கெனவே, ’கஜினி’ படத்துல நடிச்சதால ஏ.ஆர். முருகதாஸ் சார் அந்த வாய்ப்பைக் கொடுத்தார். ’நண்பன்’ பொங்கலுக்கும் ’துப்பாக்கி’ தீபாவளிக்கும்னு ஒரே வருடத்துல ரிலீஸ் ஆகி செம்ம ஹிட் அடிச்சிடுச்சு. சங்கர் சாரும் ஏ.ஆர். முருகதாஸ் சாரும் இந்தியாவின் பெரிய இயக்குநர்கள். அவங்க இயக்கி விஜய் சார் நடிச்ச படத்துல நடிச்சதுல எனக்கு ரொம்பவே ஹேப்பி. இதனால, என் மார்க்கெட்டும் உயர்ந்துச்சு. ’துப்பாக்கி’ என்னோட கரியர்ல பெஸ்ட் படம்.

விஜய் சார் ரொம்ப எளிமையானவர். ஷூட்டிங் ஸ்பாட்டுல ரொம்ப அமைதியா இருப்பாரு. டைமுக்கு வந்துடுவாரு. ரொம்ப சின்சியாரிட்டி. ’புலி’ பட ஷூட்டிங் அப்போ என்னோட காட்சிகள் தம்பி ராமையா சார்கூட இருந்துச்சு. அப்போ, பிரபு சாரும் அந்தக் காட்சிகளில் வருவாரு. ஷூட்டிங்கின்போது, தம்பி ராமையா நல்லா நடிப்பாரு, அதேமாதிரி ஈக்குவலா பெர்ஃபாம் பண்ணிடுங்கன்னு பிரபு சார் என்னைப் பார்த்து சொன்னாரு. விஜய் சார் உடனே பிரபு சார்கிட்ட ‘நண்பன் படத்துல அவரோட நடிப்பை பார்த்திருக்கீங்கள்ல சார். இதையெல்லாம் போயி அவர்கிட்ட சொல்லணுமா சார்’ அப்படிங்குற மாதிரி ரொம்ப சப்போர்ட் பண்ணி பிரபு சார்கிட்ட பேசினது, எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு.

துப்பாக்கி

விஜய் சார் ரொம்ப ஃப்ரெண்ட்லியானவர். துப்பாக்கி படம் ஷூட்டிங்குல அவர் நடிக்கிற மாதிரியே தெரியாது. எல்லாமே ரொம்ப கேஷுவலா இருக்கும். நான் கமல் சாரோட ரசிகன், இளையராஜா சாரோட பக்தன். இதுவரைக்கும் நான் கமல் சாரை தவிர்த்து எல்லா டாப் ஹீரோக்கள்கூடவும் நடிச்சிட்டேன். ஆனா, கம்ஃபர்ட்டபிளான ஒரு ஹீரோன்னா அது விஜய் சார்தான்.

இப்போ, துப்பாக்கி ரிலீஸ் ஆகுறதால எல்லாருமே கொண்டாடுவாங்க. ஒரே நேரத்துல 10 பேர் ஷூட் அவுட் பண்ணி கொல்லப்படுற அந்த மாஸ் சீனை யாராலயுமே மறக்கமுடியாது. அப்புறம், க்ளைமாக்ஸுல நான் ராணுவத்தைப்பற்றி ரொம்பப் பெருமையா பேசுவேன்.

நண்பன்

உண்மையிலேயே ராணுவத்தின்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கு. அப்படிப்பட்ட எனக்கு அந்த டயலாக்கை கொடுத்ததற்கு இயக்குநர் முருகதாஸ் சாருக்கு அப்பவே ரொம்ப நன்றி சொன்னேன். இப்போவும் சொல்லிக்கிறேன். ’துப்பாக்கி’ ரீ- ரிலீஸ் ஆனா நானும் முதல் ஷோவைப் பார்ப்பேன். நிச்சயமா, மீண்டும் தமிழ் மக்கள் ஒரு கொண்டாட்டத்துக்குத் தயாராகிட்டிருக்காங்கன்னுதான் சொல்லுவேன்” என்கிறார் உற்சாகமுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.