சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 20224 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. ஆனால், மக்களவை தேர்தல் காரணமாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் இன்றி, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. […]