இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு கடற்றொழில் அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

திரு. நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குச் சென்று வந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளதாகவும், நேற்று ஜனாதிபதி ஊடக பிரிவு ஏற்பாடு செய்த ஊடகங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்திய பிரதமரோடும் முக்கிய அமைச்சர்களோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.

இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்பரப்புகளுக்குள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

இப்பிரச்சினையை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகக் கருதி இரு தரப்பும் சட்ட ரீதியாகவும் , இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். என்றவகையில் தீர்வுகளை காண வேண்டும். என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.