இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர் – அமைச்சர் ஜீவன் சந்திப்பு…

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர், திரு. கெப்ரியல் கிராவு, அவர்களுக்கும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் (10.06.2024) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற ஓரங்கட்டப்பட்ட சமூகமான பெருந்தோட்டத் துறையினர் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களுடைய கல்வி, பொருளாதார வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் ஏனைய சமுகங்களுடன் உள்ளடக்கி ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் ஒத்துழைப்பை மேலும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இயங்கும் தேயிலை வகைகளால் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் பாதையோரங்களில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அதனை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது தொடர்பாக உடன்பட்டு திட்டமொன்றை உருவாக்க இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சமூகங்களின் ஓரங்கட்டலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் கல்வி வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வலுப்படுத்தல் என்பன மிக முக்கியமானதாகும். எனவே அந்தப் பணியைச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உறுதியாக இருக்கின்றேன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.