நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலத்துக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசாவில் பா.ஜ.க-வும், ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சியும் ஆட்சியமைக்கின்றன. அதன் அடிப்படையில், இன்று ஆந்திர மாநிலம் கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெலங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, விழா மேடையில், வணக்கம் சொல்லிச் செல்லும் தமிழிசை சௌந்தரராஜனை அழைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகத்தை கோபமாக வைத்து ஏதோ கண்டிப்பது போல பேசுவதாக தெரிகிறது.
அதற்கு விளக்கமளிக்க முயலும் தமிழிசை சௌதரராஜனிடம் `NO… NO… NO…’ என விரல்களை நீட்டிக் கூறுவதும் தெரிகிறது. மேடையில் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா என்னப் பேசினார் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகாத நிலையில், சமீபமாக தமிழக பா.ஜ.க-வில் இருக்கும் கருத்து மோதல் விவகாரமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஆனால், மேடையில் என்ன நடந்தது என தமிழிசை சௌந்தரராஜனோ, அமித் ஷாவோ, அல்லது மேடையில் அருகில் அமர்ந்திருந்த மற்ற தலைவர்களோ கூறினால்தான் உண்மை என்னவென்று வெளிவரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88