அண்மையில் நடைபெற்ற அசசாங்கத்தின் செலவீனங்னகள் தொடர்பான அமைச்சரவை உபகுழுவில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க முன்வைத்த யோசனை குறித்து ஆராய்ந்து, நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சசாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய பேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மற்றுமொரு குழுவில் வழங்கியிருந்ததாகவும், அதற்கமைய 8700 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.