மே மாதத்தில் மக்களுக்கு இஷ்டமான Tata நிறுவன கார் எது தெரியுமா? தடபுடல் விற்பனை!

Tata Cars Sales In May 2024: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாகும். மாருதி சுசுகி தொடர்ந்து டாடா நிறுவனத்தின் பல மாடல்கள் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில், நடப்பு மே மாதத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஒரு கலவையான விற்பனையையே மேற்கொண்டுள்ளது. 

டாடா நிறுவனத்தின் சில கார்கள் அதன் வழக்கமான விற்பனையையும் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் சில மாடல்கள் வழக்கத்தை விட விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் அதன் வருடாந்திர விற்பனையில் 1.79% வளர்ச்சிக் கண்டுள்ளது. அதாவது, இந்தாண்டு மே மாதம் 46 ஆயிரத்து 700 யூனிட்கள் விற்பனையான நிலையில், கடந்தாண்டு வெறும் 45 ஆயிரத்து 880 யூனிட்களே விற்பனையாகின. 

கலக்கும் Tata Punch

மேலும், வழக்கம்போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Tata Punch கார் மட்டும் இந்த வருடம் 70.34% வளர்ச்சிக் கண்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆயிரத்து 124 யூனிட்களே விற்பனையான நிலையில், இந்தாண்டு மொத்தம் 18 ஆயிரத்து 949 கார்கள் விற்பனையாகி உள்ளது. அதில் Tata Punch EV காரும் அடக்கும். மேலும், இந்த மே மாதத்தில் டாடா நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில் Tata Punch மாடலின் பங்கு மட்டும் 40.58% ஆக இருக்கிறது. இதன்மூலமே, வாடிக்கையாளர்கள் இந்த மாடலுக்கு அளிக்கும் வரவேற்பை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

சொதப்பும் மற்ற கார்கள்

ஆனால், டாடா நிறுவனத்தில் மற்ற மாடல்கள் மிக சுமாராகவே விற்பனையாகி உள்ளது. குறிப்பாக Tata Nexon மாடலும் கடந்தாண்டை விட 20.56% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு 14 ஆயிரத்து 423 யூனிட்கள் விற்றது, ஆனால் இந்தாண்டு மே மாதம் 11 ஆயிரத்து 457 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. இதிலும் EV வெர்ஷன் உள்ளது. அதேபோல், மற்றொரு EV வெர்ஷன் கொண்ட Tata Tiago காரும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் 8 ஆயிரத்து 133 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதம் 5 ஆயிரத்து 927 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

அதேபோல், Tata Altroz, Tigor, Safari, Harrier உள்ளிட்ட மாடல்களும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் TATA Altroz, Tigor/ EV, Safari, Harrier ஆகியவை முறையே 8.06%, 22.33, 6.48%, 29.44% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. மொத்தமுள்ள டாப் 7 கார்களில் TATA Punch கார் மட்டுமே கடந்தாண்டை விட அதிகமாக விற்றுள்ளது. மற்ற அனைத்தும் விற்பனையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. 

மாதாந்திர விற்பனையிலும் வீழ்ச்சி

மறுபுறம் மாதாந்திர விற்பனையை பார்த்தால், 2024ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 46 ஆயிரத்து 700 யூனிட்களை விற்பனை ஆகியுள்ளது. இதே ஏப்ரல் மாதத்தில் 47 ஆயிரத்து 885 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இதை ஒப்பிட்டால் மொத்தம் 2.47% விற்பனை குறைந்துள்ளது, அதாவது 1,185 கார்கள் குறைவாக விற்றுள்ளது. மேலும் வருடாந்திர வளர்ச்சியில் அதிகம் விற்ற TATA Punch மாதாந்திர வளர்ச்சியில் வீழ்ச்சியை கண்டுள்ளது. TATA Nexon மட்டுமே மாதாந்திர விற்பனையில் 2.59% வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற மாடல்களான Tata Tiago, Altroz, Tigor, Safari, Harrier உள்ளிட்ட மாடல்கள் மாதாந்திர விற்பனையில் வீழ்ச்சியடைந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.