எம்ஜி மோட்டாரின் பிரசத்தி பெற்ற ஹெக்டர் மற்றும் 6 அல்லது 7 இருக்கை கொண்ட ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.17,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஹெக்டரின் துவக்க நிலை ஸ்டைல் வேரியண்டின் விலையில் மாற்றமில்லாமல் ரூ.13.99 லட்சத்தில் துவங்குகின்றது.
இரு மாடல்களிலும் 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுல் மட்டுமே பெற்றுள்ள 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளது.
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் நிசான் கிக்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
சமீபத்தில் எம்ஜி குளோஸ்டரில் ஸ்னோஸ்ட்ரோம், சேன்ட்ஸ்ட்ரோம் எடிசன் வெளியான நிலையில் முன்பாக ஹெக்டர் கார்களும் பிளாக்ஸ்ட்ரோமை பெற்றுள்ளதால், இந்த இரண்டு புதிய ஸ்ட்ரோம் எடிசனும் வரக்கூடும்.
தற்பொழுது 2024 எம்ஜி ஹெக்டர் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.22.24 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.
அடுத்து 2024 ஹெக்டர் பிளஸ் காரின் விலை ரூ.18.20 லட்சம் முதல் ரூ.23.08 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.