சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F27 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் 20-ம் தேதி முதல் இந்த போனை சந்தையில் பெறலாம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் F27 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘F’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். இந்த வரிசை போனுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பிரத்யேக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அம்சங்கள்:
- 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7050 ப்ராஸசர்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியன்டில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படுகிறது
- இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
- இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது
A phone that can survive a dip in the pool and handle the pressure with ease? Now that’s the best of both worlds. Introducing the all-new #OPPOF27ProPlus5G– India’s First IP69 Rated Smartphone. #DareToFlaunt
Pre-order now: https://t.co/3NJAj3DL34 pic.twitter.com/a3llShDB4V— OPPO India (@OPPOIndia) June 13, 2024