கோவை: யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர். சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடர்பாக, குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.