சென்னை: செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமா உயிரிழந்தார். அவருக்கு வயது 59. நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவரது உயிர் பிரிந்தது. இது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையில் கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.
