திருப்பூர்: 8,000 ரூபாய் லஞ்சம்… 16 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் துணை வட்டாட்சியருக்கு சிறை!

திருப்பூர் பி.என். சாலை பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன். இவர்களது மகன்களான தண்டபாணி, மேகநாதன் இருவருக்கும் ராக்கியாபாளையத்தில் தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், தலா 93 சென்ட் நிலத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து, தனித்தனி பட்டா கேட்டு சகோதரர்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு விண்ணப்பித்தனர்.

அப்போது, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்ந பாலசுப்பிரமணியம் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக, தண்டபாணி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

சிறைத் தண்டனை

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தை நடைபெற்று வந்தது. 16 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பாலசுப்ரமணியத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நடுவர் செல்லத்துரை தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.