தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது. இந்தக் காப்பகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். காப்பகத்தை போடி அருகே பல்லவரராயன்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி(28) என்பவர் நிர்வகித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பராமரிக்கப்பட்டு வந்தனர். அதில் 10 வயது சிறுவன் காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் அந்தச் சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அப்போது அந்தச் சிறுவன் காப்பகத்தில் பணியாற்றும் ஊழியரிடம், காப்பக நிர்வாகி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறினார். இத்தகவல் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பக நிர்வாகி சிறுவனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, மகளிர் போலீஸார் முனீஸ்வரி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88